63 குழந்தைகள் பலி: யோகி ஆதித்யநாத் பதவி விலக கோரிக்கை! Featured

Saturday, 12 August 2017 13:41 Published in இந்தியா

கோரப்பூர்(12 ஆகஸ்ட் 2017): உத்திர பிரதேச மாநிலம் கோராப்பூர் மருத்துவமனையில் 63 குழந்தைகள் பலியானதற்கு பொறுப்பேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

உ.பி., முதல்வர் யோகியின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் உள்ளது பாபா ராகவ் தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை. மாவட்டத்தில் பெரிய மருத்துவமனையாகவும் உள்ளது. இங்கு, கடந்த ஐந்து நாட்களில் சுமார் 63 குழந்தைகள் பலியாகியுள்ளன. இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்‌ஷிஜன் நிறுத்தப்பட்டதே குழந்தைகள் பலியானதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் குறித்து கோரக்பூர் கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே குழந்தைகள் பலியானமைக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

The Congress on Saturday demanded Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and Health Minister Siddharth Nath Singh’s resignations, blaming the state government for its sheer failure in providing proper medical facilities to the patients in time, which led to death of 63 in Gorakhpur’s Baba Raghav Das Medical College.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.