விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்காக அழுத ராகுல் காந்தி!

வதோரா(11 அக் 2017): விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்காக நானும், எனது தங்கையும் அழுதோம் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர்.

அதில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ராகுல், பிரபாகரனின் சடலத்தை தமது சகோதரி பிரியங்காவிடம் பேசியபோது, அவரும் அதே மனநிலையில் இருந்ததாக ராகுல் குறிப்பிட்டார்.

மேலும் மற்றவர்களது துயரங்களில் பங்குகொள்வதுதான், காந்தி குடும்பத்தின் பாரம்பரியம் எனவும், ராகுல்காந்தி தெரிவித்தார்.