மோடி மக்களுக்கு நிலவில் வீடு வாங்கி கொடுப்பார்: ராகுல் காந்தி கிண்டல்!

உதய்ப்பூர்(12 அக் 2017): பிரதமர் மோடி அனைத்து இந்திய மக்களுக்கும் நிலவில் வீடு வாங்கி கொடுப்பார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த அவர், பிரதமர் நரேந்திர மோடி 2030ஆம் ஆண்டில் நிலவை பூமிக்கு கொண்டு வந்து விடுவார். பிரதமர் மோடி 2028ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள அனைவருக்கும் நிலவில் வீடு வாங்கித் தருவார் என்றும், 2025ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நிலவுக்குச் செல்ல ராக்கெட் வாங்கி கொடுப்பார் என்றும் கிண்டலாக பேசியுள்ளார்.