மதக்கலவரமாக மாறிய சாலை விபத்து!

லக்னோ(12 அக் 2017): உத்திர பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்து மதக்கலவரமாக மாறியது.

உத்திர பிரதேசம் பல்லியா பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இன்திகாப் ஆலம் எபவர் அரவிந்த் ராஜ்பார் என்பவரது இருசக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதியுள்ளார். இதில் அரவிந்த் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் அரவிந்த் வசிக்கும் பகுதியில் உள்ள இந்துக்களுக்கு தெரிவிக்கப் பட்டது. அங்கிருந்து வந்த ஒரு கும்பல் இன்திகாப் ஆலம் வசிக்கும் பகுதியில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.

மேலும் அரவிந்த் குடும்பத்தினர் இன்திகாப் ஆலத்திற்கு எதிராக போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து ஆலம் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே கலவரத்திற்கு காரணமான 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

A mob of hundreds attacked a specific religious community in Ratsar Township of UP. According to the news published in TOI, the mob destroyed carts of fruit and vegetable vendors. Two shops were also set on fire. However, police came into action immediately and brought the situation under control. 16 miscreants were arrested.