மத்திய அரசின் புதிய ஹஜ் கொள்கை ஹஜ் யாத்ரீகர்களை பாதிக்கும்!

புதுடெல்லி(12 அக் 2017): மத்திய அரசு வகுத்துள்ள புதிய ஹஜ் கொள்கை வரும் காலங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹஜ் யாத்ரீகர்களை பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிகிறது.

45 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் அனுமதிக்கப்பட்ட ஆண் துணை(மஹ்ரம் ) இல்லாமல் குறைந்தது நான்கு பேர் பயணிக்கலாம் என்று மத்திய அரசு வகுத்துள்ள புதிய கொள்கையும் முறையானது அல்ல என்று முஸ்லிம் ஆர்வலர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதாவது நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் பெண்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட்ட ஆண் (மஹ்ரம்) துணையுடன் பயணிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் மத்திய அரசு வகுத்துள்ள இந்த கொள்கை முஸ்லிம் சட்டரீதியாக ஏற்புடையதல்ல என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மேலும் ஹஜ் மானியம் விலக்கு அளிக்கப் பட்டுள்ள நிலையில் கப்பல் வழி போக்குவரத்தை அறிமுகப் படுத்த வேண்டும் என்றும் முஸ்லிம் ஆர்வலர்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் குறைந்த செலவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் முஸ்லிம் அறிஞர்கள் விரும்புகின்றனர்.

The proposed Hajj police of the central government will directly affect the pilgrims