இளம் பெண் அரூஷி - வேலைக்காரர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! Featured

Thursday, 12 October 2017 20:03 Published in இந்தியா

அலகாபாத்(12 அக் 2017): நொய்டாவில் இளம்பெண் ஆரூஷி மற்று வேலைக்காரர் ஹேம்ராஜ் கொலை வழக்கின் திடீர் திருப்பமாக கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

உ.பி. மாநிலம் நொய்டாவின் மருத்துவத் தம்பதியான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் மீது அவர்களது ஒரே மகளான 14 வயது ஆரூஷி மற்றும் வேலைக்காரர் ஹேமராஜை கள்ளக்காதல் காரணமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு விசாரணையின் முடிவில் தம்பதிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் டாக்டர் தம்பதியர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். அப்பீல் வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. திடீர் திருப்பமாக சிறுமி ஆருஷியின் பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The Allahabad High Court has cleared dentist couple Nupur and Rajesh Talwar in the murder case of their teen daughter, Aarushi.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.