ஓடும் ரெயிலில் பாலியல் தொல்லை - குதித்து தப்பிய தாயும் மகளும்! Featured

Monday, 13 November 2017 15:27 Published in இந்தியா

கான்பூர்(13 நவ 2017): பாலியல் தொல்லையிலிருந்து தன் மகளை காப்பாற்ற ஓடும் ரெயிலிலிருந்து குதித்து தாயும் மகளும் தப்பியுள்ளனர்.

சனிக்கிழமை அன்று ஹவுராவிலிருந்து ஜோத்பூருக்கு சென்றுகொண்டிருந்த ரெயிலில் 40 வயது தாயும், 15 வயது மகளும் பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்தனர். ரெயில் சாந்தாரி மற்றும் கான்பூருக்கு இடையே சென்றுகொண்டிருந்தபோது வக்கிர கும்பல் ஒன்று 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். ஒரு எல்லைக்கு மேல் தாக்குபிடிக்க முடியாத இருவரும் அந்த கும்பலிடமிருந்து தப்ப ஓடும் ரெயிலிலிருந்து குதித்துள்ளனர்.

இதில் இருவரும் படுகாயமடைந்து தப்பி சந்தரி ரெயில் நிலையத்துக்கு தட்டுத்தடுமாறி வந்துள்ளனர். இதனை கண்ட மக்கள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரெயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Mother daughter jumped from train escape rape

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.