புதையலுக்காக சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற ஏழுபேர் கைது! Featured

Tuesday, 14 November 2017 10:15 Published in இந்தியா

மைசூர்(14 நவ 2017): மைசூரில் புதையலுக்காக சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற ஏழுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மைசூர் அருகே எம்மரகாலாவைச் சேர்ந்த சுசீந்திரா என்பவரிடம் யாரையேனும் பலியிட்டல் அவருக்கு புதையல் கிடைக்கும் என்று ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனை நரபலிக்காக சுசீந்திரா ஏற்பாடு செய்த கும்பல் கடத்தி வந்துள்ளது.

இந்நிலையில் சுசீந்திராமீது சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். இதனை அடுத்து சுசீந்திரா உட்பட ஏழுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சிறுவனையும் மீட்டனர்.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.