வைரலாகும் ஹர்திக் பட்டேலின் செக்ஸ் வீடியோ! Featured

Tuesday, 14 November 2017 10:16 Published in இந்தியா

ஆமதாபாத்(14 நவ 2017): குஜராத் பட்டேல் செக்ஸ் சிடி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

குஜராத்தில் பட்டேல் சமூகத்திற்காக போராடி வரும் ஹர்திக் பட்டேலும் ஒரு பெண்ணும் இணைந்து ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகி குஜராத் அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 16 ஆம் தேதி எடுக்கப்பட்டதாக் அந்த வீடியோவில் உள்ளது.

குஜராத் தேர்தலையொட்டி பாஜகவை ஹர்திக் பட்டேல் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ மார்பிங் மூலம் செட்டப் செய்யப்பட்டு பாஜகவால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் உள்ளது நான் இல்லை என்றும் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவின் கீழ்த்தரமான அரசியல் இது என்றும் ஹர்திக் பட்டேல் விமர்சித்துள்ளார். இதனால் என் அரசியல் வாழ்க்கை பாதிக்காது என்றும் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஹர்திக் பட்டேல் தயாராக உள்ள நிலையில் இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Patidar quota leader Hardik Patel got embroiled in a controversy on Monday as two sex video clips allegedly showing him with a woman went viral on social media.

 

Last modified on Tuesday, 14 November 2017 10:23
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.