பாஜக அரசு இன்னொரு மியான்மரை உருவாக்க முயல்கிறது: மவுலானா அர்ஷத் மதனி! Featured

Tuesday, 14 November 2017 14:39 Published in இந்தியா

புதுடெல்லி(14 நவ 2017): பாஜக அரசு இன்னொரு மியான்மரை உறுவாக்க முயல்கிறது என்று மவுலான அர்ஷத் மதனி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஜமியத் உல் உலமா அல் ஹிந்த் தேசிய தலைவர் மவுலான செய்யது அர்ஷாத் மதனி பேசும்போது, "1985 ஆம் ஆண்டு உடன்படிக்கையை அஸ்ஸாம் அரசு முறையாக பின்பற்றவில்லை என்று குற்றஞ் சாட்டினார். NRC மனிதாபிமான உடன்படிக்கைபடி 1971 க்கு முன் அஸ்ஸாமில் குடியேறியவர்கள் இந்திய பிரஜைகளாவார்கள். ஆனால் மத்தியிலும் மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைந்தபிறகு அது மதத்தை முதன்மை படுத்துகிறது.

இந்துக்களாக இருந்தால் லட்சக்கணக்கான இந்து பெண்களின் பெயர்களை இந்திய குடிமக்களின் பட்டியலில் சேர்க்க அஸ்ஸாம் அரசு முயல்கிறது. ஆனால் முஸ்லிம்களாக இருந்தால் நிராகறிக்கப் படுகின்றனர். 400 வருடங்களாக அங்கு தங்கியுள்ள முஸ்லிம்களின் சந்ததி பெண்கள் புறக்கணிக்கப் படுகின்றனர். அவர்கள் பெற்றோரை விட்டு பிரிந்து கணவருடன் வாழ்ந்து வரும் நிலையிலும், பஞ்சாயத்து பதிவு ஆவணங்கள் அளித்தும் உரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் 2014ல் குடியேறிய இந்து பெண்களுக்கு குடியுரிமை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

2 முதல் 4 லட்சம் ரோஹிங்கிய மக்களின் பிரச்சனைக்காக் சுமார் 80 லட்சம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த அஸ்ஸாம் அரசு முயல்கிறது. என்று மவுலான செய்யது அர்ஷாத் மதனி கூறினார்.

இந்த செய்தியாளர்கள் மாநாட்டில், சிபிஐ பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியத் தலைவர் ஸ்வராஜ் இந்தியா யோகேந்திர யாதவ், அரசியல் நிபுணர் ஹைரன் கோஹைன் அரசியல் ஆய்வாளர், பேராசிரியர் அபூபவான், காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.


Jamiat Ulama-E-Hind President Maulana Syed Arshad Madani flayed BJP government saying it is trying to create Myanmar like situation in Assam, but it should bear in mind that it was the question of 2-4 lakh Rohingyas while in Assam 80 lakh Indian citizens will be affected by the issue.

Last modified on Tuesday, 14 November 2017 14:43
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.