எனது தந்தை ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார்: போலீஸ் அதிகாரியின் மரணத்தை நம்ப மறுக்கும் ஜொஹ்ரா! Featured

Tuesday, 14 November 2017 20:04 Published in இந்தியா

ஜம்மு(14 நவ 2017): தந்தையின் மரணத்தை நம்ப மறுக்கும் 8 வயது சிறுமி ஜொஹ்ரா இன்றும் ஹஜ்ஜிலிருந்து தந்தை திரும்பி வருவார் என்று எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்கு தலுக்கு அப்துல் ரஷீத்(55) என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். அப்போது அப்துல் ரஷீதின் மகள் சிறுமி ஜொஹ்ரா கதறி அழுத காட்சி பலரையும் பதறவைத்தது. மேலும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் ஜொஹ்ரா இன்றும் தனது தந்தையின் மரணத்த நம்ப மறுப்பதாக ரஷீதின் மனைவியும் ஜொஹ்ராவின் தாயுமான நசீமா அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நசீமா, "இன்றும் என் மகள் ஹொஹரா தந்தையின் நினைவாகவே இருக்கிறாள். அவர் மீது மிகவும் பாசம் வைத்திருந்தாள். ஜொஹரா எது விரும்பினாலும் ரஷீத் வாங்கி கொடுப்பார். அவள் கொஞ்சம் அழுதாலே தாங்க மாட்டார். ஆனால் கடந்த ஆகஸ்ட் முதல் அழுதுகொண்டே இருக்கிறாள். சரியாக உணவு உண்ணுவதில்லை. தந்தை ஹஜ்ஜுக்கு சென்றுள்ளார். விரைவில் திரும்புவார் என்று எதிர் பார்த்து காத்திருக்கிறாள். நான் எவ்வளவோ கூறியும் நம்ப மறுக்கிறாள்" என்றார் கவலையுடன்.


Remember the heart wrenching image of an inconsolable Zohra, the eight-year-old daughter of a slain Jammu and Kashmir police officer who was martyred in August?

Zohra hasn’t still been able to come to terms that her father is no more and will never come back. She was told that her father he had left for Haj and will come back some day, her mother Naseema Akhter said, reporters.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.