ம.பியில் மரண தண்டனை சட்டம் இயற்றியும் பலனில்லை - சிறுமி வன்புணர்வு!

போபால்(06 டிச 2017): மத்திய பிரதேசத்தில் மரண தண்டனை சட்டம் இயற்றியும் பலனில்லை. அங்கு 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் டெபுலூர் தெஹில் மாவட்டத்தின் சந்தர் என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் அவரது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். அதே கிராமத்தில் உள்ள சந்தீப் சாங்லால் ( வயது 19) என்பவர் பாதிக்கபட்ட சிறுமியின் வீட்டில் குழந்தைகளுடன் டிவி பார்த்து கொண்டு இருந்தார். வீட்டில் சிறுமியின் பெற்றோர்கள் இல்லை. இதனால் குழந்தைகள் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

சிறார்கள் வன்புணர்வுக்கு மரண தண்டனை சட்டம் இயற்றப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.