இந்தியாவில் நிலநடுக்கம்!

புதுடெல்லி(06 டிச 2017): இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் வட மாநிலங்களில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டது. இரவு 08;45 க்கு ஏற்அட்ட இந்த நில நடுக்கம் 5.5 ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

எனினும் சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை.