இளம் பெண் பயணி முன்பு சுய இன்பம் அனுபவித்த ஓலா டாக்சி டிரைவர்!

பெங்களூரு(07 டிச 2017): பெங்களூரில் இளம் பெண் பயணி முன்பு ஓலா டாக்சி டிரைவர் சுய இன்பம் அனுபவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் ஓலா டாக்சி டிரைவர் பின்பக்க கதவின் குழந்தைகள் பூட்டை போட்டுவிட்டு 23 வயது இளம்பெண் பயணி முன்பு சுய இன்பம் அனுபவித்துள்ளார். மேலும் பெண்ணுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார்.

ஏற்கனவே ஐதராபாத்தில் யூபர் டாக்சி டிரைவர் தனியாக பயணித்த இளம் பெண் முன்பு சுய இன்பம் அனுபவித்தார். இதனை அந்த பெண் சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வெளியிட்டதை அடுத்து டிரைவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் மற்றொரு சமபவம் நடந்துள்ளது. மேலும் இதுபோன்று பலமுறை நடந்துள்ளதாகவும் டாக்சி நிறுவனங்கள் இதில் முக்கிய கவனம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.


In Bengaluru, where an Ola cab driver had allegedly masturbated in front of a 23-year-old woman passenger after activating the child-lock.