5 லட்சம் அமெரிக்க டாலர் கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் விமான பணிப்பெண் கைது! Featured

Thursday, 11 January 2018 22:12 Published in இந்தியா

புதுடெல்லி(11 ஜன 2018): டெல்லியிலிருந்து சட்டவிரோதமாக 5 லட்சம் அமெரிக்க டாலரை கடத்த முயன்ற ஜெட் ஏர்வேஸ் விமான பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானத்தில் பணியில் இருந்த தேவ்ஷி குல்ஷ்ரேஸ்தா என்ற அப்பெண், தனது பையில் அப்பணத்துடன் பிடிபட்டதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த பணம் இந்திய மதிப்பில் சுமார் 3 கோடி ரூபாய் (4.8 லட்சம் அமெரிக்க டாலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக இதுபோன்ற கடத்தல் நடைபெற்றதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கடத்தலில் டெல்லியை சேர்ந்த அமித் மல்ஹோத்ரா என்பவருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.


A Jet Airways air hostess accused of trying to smuggling Rs. 3.34 crore in US dollars

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.