இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து! Featured

Friday, 12 January 2018 12:28 Published in இந்தியா

புதுடெல்லி(12 ஜன 2018): பி.எஸ்.எல்.வி. சி-40 திட்டம் வெற்றியடைந்ததையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோளான ‘கார்ட்டோசாட்-2’ உள்பட 31 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் இன்று காலை 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு பின்னர் நிலைநிறுத்தப்பட்டது. இன்று செலுத்தப்பட்ட கார்ட்டோசாட்-2 இஸ்ரோவின் 100-வது செயற்கைக்கோள் ஆகும்.

இந்த திட்டம் வெற்றியடைந்தையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.