மதரஸாக்கள் மீது அவதூறு கூறிய மத்திய வக்பு போர்டு தலைவருக்கு நோட்டீஸ்! Featured

Friday, 12 January 2018 12:50 Published in இந்தியா

புதுடெல்லி(12 ஜன 2017): மதரஸாக்கள் மீது அவதுறு கூறிய மத்திய வக்பு போர்டு தலைவர் வசீம் ரிஜ்விக்கு ஜமிஅத் உல் உலமா ஹிந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சன்னி மற்றும் ஷியா மதரஸாக்கள் தீவிரவாதத்தை பரப்புவதாக மத்திய வக்பு போர்டு தலைவர் வசீம் ரிஜ்வி பிரதமர் மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இது முஸ்லிம் மார்க்க அறிஞர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை அடுத்து வசீம் ரிஜ்விக்கு முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வசீம் ரிஜ்வியின் இந்த கருத்து முஸ்லிம்கள் மனதை காயப்படுத்தியுள்ளது எனக்கூறி, ஜமியத் உல் உலமா அல் ஹிந்த் தலைவர் மவுலானா முஸ்தகீன் அஜான் அஸ்மி, வசீம் ரிஜ்விக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் அதில் ரிஜ்வி இந்திய முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவருடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டிற்காக ரூ 20 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

 


Jamiat Ulama-e-Hind on Thursday served a legal notice to the chairman of Shia Central Waqf Board chairman, Wasim Rizvi

Last modified on Friday, 12 January 2018 12:56
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.