உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதாக நீதிபதிகள் பகீர் புகார்! Featured

Friday, 12 January 2018 13:04 Published in இந்தியா

புதுடெல்லி(12 ஜன 2017): உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதாக நீதிபதிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்திய வரலாற்றில் முதன் முதலாக பணியில் உள்ள நான்கு நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்ததாவது:

உச்ச நீதிமன்றம் சமீப காலமாக சரியில்லை. சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இவை நாட்டிற்கு நல்லதல்ல. இதனால் நாட்டின் ஜனநாயகம் கேள்விக்கூத்தாகிவிடும். இதனை சரிசெய்ய நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தலைமை நீதிபதி மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வது காலத்தின் கட்டாயம்

இவ்வாறு நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவிதார்.

உச்ச நீதிமன்றம் குறித்து நீதிபதிகள் கூறியுள்ள கருத்து நாட்டில் பொதுமக்களிடையே அதிர்ச்சியைன் ஏற்படுத்தியுள்ளது.

Comments   
0 #1 NSM Shahul Hameed 2018-01-12 23:25
மேலும் கீழும் ஆர்டர்கள் போடு, அதுதான் நீதியோ?

நாம் சொல்வோம் மீதியை! - என்று துனிவுடன் வந்துவிட்டார்கள் நீதியரசர்கள்!. இது நமது நீதி பரிபாலணத்திற்கு நல்லது செய்தால் சரி!
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.