போலீசால் ஆறு வயது சிறுமி வன்புணர்வு! Featured

Friday, 12 January 2018 14:36 Published in இந்தியா

நொய்டா(12 ஜன 2018): கிரேட் நொய்டாவில் 6 வயது சிறுமி ஒருவர் போலீஸ் காண்ஸ்டபிளால் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது கான்ஸ்டபில் சுபாஷ் என்பவன் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று யாரும் இல்லாத நேரத்தில் வன்புணர்வு செய்துள்ளான்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து சிறுமியை மீட்டதோடு கான்ஸ்டபிலை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் பிகாரில் வசித்தபோது சுபாஷ் பக்கத்து வீட்டில் வசித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Greater Noida: A six-year-old girl was allegedly raped by a police constable on Thursday morning, following which he was arrested, an official said.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.