என் நிலை எந்த இந்து பெண்ணுக்கும் வரக்கூடாது :தன்யஸ்ரீ தற்கொலை குறிப்பு! Featured

Saturday, 13 January 2018 00:21 Published in இந்தியா

பெங்களூரு(12 ஜன 2018): "எனக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த இந்து பெண்ணுக்கும் வரக்கூடாது" என்று தற்கொலை செய்துகொண்ட தன்யஸ்ரீ தற்கொலைக்கு முன் அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்கமங்களுருவை சேர்ந்த பி.காம் மாணவி தன்யஸ்ரீ(20). இவர் சந்தோஷ் என்ற அவரது நண்பருடன் வாட்ஸ் அப்பில் தகவல் பறிமாறிக்கொண்டபோது, முஸ்லிம்களையும், முஸ்லிம் கோட்பாடுகளையும் ஆதரித்து தகவல் பறிமாறியுள்ளார். இதனால் சந்தோஷ் ஆத்திரமுற்றுள்ளார். மேலும் தன்யஸ்ரீயின் ஜாதி குறித்தும் பேசியுள்ளார். மேலும் முஸ்லிம்களை ஆதரிக்கக் கூடாது என்றும் சந்தோஷ் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சந்தோஷ் தன்யஸ்ரீயுடன் பறிமாறிக்கொண்ட தகவல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை இந்து அமைப்புகள் வாட்ஸ் அப் குழுமங்களில் பகிர்ந்துள்ளார். அதில் "நான் முஸ்லிம்களை விரும்புகிறேன். முஸ்லிம்களின் கோட்பாடுகள் எனக்கு பிடிக்கும்" . என்று இருந்துள்ளது. இதனால் ஆத்திரமுற்ற பாஜக, பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த சிலர் தன்யஸ்ரீ வீட்டுக்கு சென்று தன்யஸ்ரீயையும் அவரது பெற்றோரையும் மிரட்டியுள்ளனர்.

மேலும் சில முஸ்லிம் ஆண்களுடன் தன்யஸ்ரீ இருப்பது போன்ற போட்டோக்களை சமூக வலைதளங்களில் உலாவ விட்டுள்ளனர். மேலும் லவ்ஜிஹாத் குற்றச்சாட்டையும் தன்யஸ்ரீ மீது சுமத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த தன்யஸ்ரீ அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் தன்யஸ்ரீயின் தற்கொலை குறிப்பில்,"இந்துவான எனக்கு இந்துக்களிடமே நீதி கிடைக்கவில்லை என்றால் நான் எங்கு நீதிக்காக போவேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும்," நான் எந்த முஸ்லிம் இளைஞர்களையும் காதலிக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களை பிடிக்கும் என்று மட்டுமே கூறியிருந்தேன். இதில் என்ன தவறு உள்ளது. இந்துவான எனக்கு இந்துக்களிடமே பாதுகாப்பு இல்லையென்றால் நான் எங்கு போவேன். என் நிலை வேறு எந்த இந்து பெண்ணுக்கும் வரக்கூடாது. என் தற்கொலை அதற்கு முடிவு கட்ட வேண்டும்" என்று அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

இதற்கிடையே தன்யஸ்ரீ தற்கொலைக்கு காரணமான சந்தோஷ் தலைமறைவாக இருந்தார். அவரை வியாழனன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leaving behind a suicide note, 20-year-old Dhanyashree committed suicide after being accused of “being friendly with Muslims”.

Comments   
+2 #1 NSM Shahul Hameed 2018-01-13 08:25
மடமைகள் மதங்கொண்டதால்

மடமயில் மரித்துவிட்டது!
#தன்யஸ்ரீ

மடமைகள் 'லவ்-ஜிஹாத்' என்று கூச்சலிட்டனர்,

மடமயில் GIVE-DEATH என்று பேச்சிழந்து போய்விட்டார்!

என்று மடியும் இந்த மதவெறி மடமையின் வேகம்!

- nsmsh
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.