தலித் சிறுமியை வன்புணர முயற்சி - எதிர்த்ததால் சிறுமி மீது தீவைப்பு!

போபால்(12 பிப் 2018): மத்திய பிரதேசத்தில் 13 வயது தலித் சிறுமியை வன்புணர முயன்ற கும்பல் சிறுமி மீது திவைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் சிறுமியை வன்புணர முயன்றுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற சிறுமி மீது மண்ணெண்னெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது..

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ராஜ்கர் மருத்துவமனையில் சேர்த்தனர். 50 சதவீதம் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் அந்த சிறுமியை உயர்சிகிச்சைக்காக போபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

 

In a shocking incident, a minor girl belonging to Dalit community was allegedly torched after she resisted rape at Sustani village in Rajgarh in Madhya Pradesh.