மோகன் பகவத் ஆன்டி இந்தியன் இல்லையா?

புதுடெல்லி(13 பிப் 2018) ஆர்.எஸ்.எஸ் நினைத்தால் ராணுவத்தை விட அதிவேகமாக மூன்றே நாளில் போருக்கு ஆட்களை தயார் செய்துவிடும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எதற்கெடுத்தாலும் ஆன்டி இந்தியன் என கூறும் பாஜக ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ்சுடன் ஒப்பிட்டு பேசியுள்ள மோகன் பகவத்தை ஆன்டி இந்தியன் என்று அழைக்காதது ஏன்?என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் மோகன் பகவத்தின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்திய ராணுவத்தையே ஆர்.எஸ்.எஸ் அவமானப்படுத்தியுள்ளது. என்று அவர் தெரிவித்துள்ளர்.

இதுபோல் ராணுவத்தின் இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், வீரமரணமடைந்த வீரர்களை தரகுறைவுப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியோ வேறு கட்சிகளோ கருத்து கூறியிருந்தால் இனி வரும் தேர்தல்களில் அவர்கள் கூறிய கருத்துகளை கூறி இந்தியர்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்திருக்கும். ஆனால் மோகன் பாகவத் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். இல்லை அவரது கருத்தை பாஜகவும் ஆமோதிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.