டீ பிரேக்கில் பக்கோடா சாப்பிட்ட ராகுல் காந்தி!

பெங்களூரு(13 பிப் 2018): கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டீ நேரத்தில் பக்கோடா சாப்பிட்டார்.

கர்நாடகாவில் ஜன ஆசிவாத யாத்ரா என்ற பெயரில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கர்நாடகா ரைச்சூர் மாவட்டம் கல்மலா கிராமத்தில் சுற்றுப்பயணம் சென்றபோது அங்கு டீ நேரத்தில் பக்கோடா சாப்பிட்டார். அப்போது அவருடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் உடனிருந்தனர்.

பக்கோடா தொழில் செய்தும் முன்னேறலாம் என்று பிரதமர் மோடி கூறிய கருத்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் ராகுல் காந்தி பக்கோடா சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Congress President Rahul Gandhi on Monday devoured local cuisine mirchi pakoda and tea at Kalmala village in Raichur district.