ஏழு வயது சிறுவனை கொலை செய்து சூட்கேசில் மறைத்துவைத்தவன் கைது!

புதுடெல்லி(13 பிப் 2018): டெல்லியில் ஏழு வயது சிறுவனை கொலை செய்து சூட்கேசில் மறைத்து வைத்த சிறுவனின் உறவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி சுவரப் நகர் பகுதியில் இருந்து ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கபட்டது. அதில் 7 வயது மதிக்க தக்க சிறுவன் பிணம் இருந்தது. இந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன் கடத்தப்பட்டு உள்ளான் .

இது தொடர்பாக உறவினர் அவிதேஷ் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். விசாரணையில் அவிதேஷ் சிறுவனை கடத்தி கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து உள்ளது தெரிய வந்தது.

மேலும் குழந்தையை கடத்தி வைத்து கொண்டு அந்த குடும்பத்துடன் இருந்தே நாடகமாடி உள்ளார். புகார் கொடுப்பதிலும் குழந்தையை தேடுவது போல் நடித்தும் உள்ளார்.

அவிதேஷ் ஒரு யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றவர் சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.