தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க நுழைவுக் கட்டணம் உயர்வு!

புதுடெல்லி(1 பிப் 2018): தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நுழைவுக் கட்டணம் 40 லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றன தாஜ்மஹால் ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. மொகலாயர் காலத்து கட்டுமானங்களுடன், பிரமிக்க வைக்கும் அழகில் இருப்பதால், உலக சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வந்து குவிகின்றனர்.

இந்நிலையில், தாஜ்மாஹாலை சுற்றிப்பார்க்க உள்நாட்டவர்களுக்கு ரூ.40 லிருந்து 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது. இது மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே. இதற்கென வெவ்வேறு நிறங்களில் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தற்போது, வரை உள்பகுதியில் உள்ள மும்தாஜ் கல்லைறைக்கு சென்று பார்வையிட கட்டணம் ஏதும் கிடையாது.

மேலும் உள்பகுதிக்கு சென்று பார்க்க கூடுதலாக 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வெளிநாட்டவர்களுக்கு பொருந்தாது. ஏனென்றால், அவர்களுக்கு ஏற்கனவே அதிகமான தொகையே கட்டணமாக வசூலிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Tourists will have to pay more from April 1 to see the Taj Mahal after the central government decided to raise the entry fee as part of its plans to preserve the 17th-century Mughal-era mausoleum and manage the swirling crowd that come in thousands every day to marvel at the monument.