நாகையிலிருந்து காரைக்காலுக்கு மணல் கடத்தல், விவசாயிகள் புகார்!

Thursday, 06 August 2015 22:30 Published in தமிழகம்

காரைக்கால்: நாகை மாவட்டம் தரங்கம்பாடியிலிருந்து காரைக்காலுக்கு மணல் கொள்ளை நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தவேண்டும் என கூடுதல் ஆட்சியரிடம் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி மகிமலையார் வெட்டுவாய்க்கால் கடைமடை பாசன விவசாயிகள் சங்க துணைத்தலைவர் ஜி.ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள், காரைக்கால் மாவட்ட கூடுதல் ஆட்சியர் முஹம்மது மன்சூரிடம் நேற்று மனு ஒன்று வழங்கினர். பின்னர், மனு குறித்து, சங்க துணைத்தலைவர் ஜி.ராமதாஸ் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

"எங்கள் ஊராட்சியைச் சேர்ந்த தரங்கம்பாடி குமார் என்பவர், அரசு விதிமுறைகளை மீறி, சுமார் 40 அடி ஆழம் வரை மணலை அள்ளி, தரங்கம்பாடியில் பதுக்காமல், காரைக்கால் மாவட்ட வரிச்சிக்குடியில் கிராமத்தில், மாவட்ட வருவாய்துறைக்கு தெரியாமல் மலைபோல் குவித்து வருகிறார்.

இதனால், இரு மாநில அரசுக்கும் வருவாய் இழப்பீடு ஏற்படுத்துவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், குடிநீர் பற்றாகுறையையும் ஏற்படுத்தி வருகிறார். மணல் கொள்ளை தரங்கம்பாடியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றாலும், அதனை பதுக்கி வைக்க காரைக்கால் மாவட்டத்தை அவர் தவறாக பயன்படுத்தி வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பதுக்கி வைத்துள்ள மணலை பறிமுதல் செய்யவேண்டுகிறோம்". என்றார்.

Last modified on Thursday, 06 August 2015 22:13
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.