சவூதியில் விபத்தில் சிக்கி ஊர் செல்ல முடியாமல் தவித்த தமிழரை உரிய உதவி செய்து தாயகம் அனுப்பி வைத்த தமிழ் ஆர்வலர்கள்! Featured

ஜித்தா(13 ஏப் 2017): சவூதியில் விபத்தில் சிக்கி கால்களை இழந்து பரிதவித்த தமிழர் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் உதவியுடன் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தமிழ்நாடு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(37) சவூதி அரேபியா ஜித்தாவில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். ஆனால் சில நாட்களில் அங்கிருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் வெளியேறி ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அவர் பணிபுரிந்து வந்த பெட்ரோல் பம்பிற்கு அதி வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவர் மீது மோதிய காரின் உரிமையளர் தப்பியோடிவிட ஆறுமுகம் விபத்துக்குள்ளான செய்தி தமிழ் அமைப்புகளுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து ஆறுமுகத்திற்கு ஜித்தா தமிழ் சங்கத்தை சேர்ந்த ரஃபியா, சிராஜ், தாஸ் செந்தமிழ் மன்றம் குணசேகர பாண்டியன் இன்னும் பல தமிழ் ஆர்வலர்கள் உதவி புரிந்து கடந்த 5 மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். எனினும் ஆறுமுகம் ஒரு காலை இழந்து சிரமப்பட்டு வந்தார்.

இதற்கிடையே ஆறுமுகம் ஏற்கனவே பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து ஓடி வந்துவிட்டதால் அவரிடம் பாஸ்போர்ட், குடியுரிமை அட்டை(இக்காமா) எதுவும் இல்லாததால் ஊருக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் சவூதி அரசு 90 நாட்கள் பொது மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டதை அடுத்து ஆறுமுகத்திற்கு தமிழ் ஆர்வலர்களின் உதவியுடன் மற்றும் இந்திய தூதரக உதவியுடனும், எமெர்ஜென்சி பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு அதன் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்யப்படு கடந்த செவ்வாயன்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருக்கு பல தமிழர்கள் பொருளாதார ரீதியாகவும் உதவி புரிந்தமை குறிப்பிடத்தகக்து.

Arumugam’s right leg was amputated and was bed ridden for the last 5 months. Tamil community members were assisting him is efforts to go home but could not succeed due to the Huroob notification against him.

When the amnesty scheme was announced by the Kingdom, it was a ray of hope for Arumugam and Tamil community workers — Rafia and Susai — who with the help of Indian Consulate successfully completed his exit formalities at deportation center in Shumaisi.

Last modified on Thursday, 13 April 2017 16:35