படுக்கை அறையில் 8 வயது சிறுமியை முத்தமிட்ட இளைஞருக்கு சிறை! Featured

துபை(15 ஏப் 2017): 8 வயது சிறுமியை முத்தமிட்ட பாகிஸ்தான் இளைஞருக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கி துபை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹங்கேரியன் குடும்பம் ஒன்று துபையின் ஒரு குடியிருப்பில் குடியேறியது. அப்போது வீட்டு பொருட்களை ஏற்றிவந்து வீட்டுக்குள் வைத்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பணியாளர் ஒருவர் அந்த வீட்டில் விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியை முத்தமிட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து, மற்றும் சிறுமியின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு துபை நீதிமன்றம் பாகிஸ்தான் இளைஞருக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனை காலம் முடிந்ததும் அவர் நாடுகடத்தவும் நீதிமறம் உத்தரவிட்டுள்ளது.

A worker has been jailed for three months for walking into the bedroom of an eight-year-old girl and kissing her while she was playing with her toys.