அபுதாபியில் ஈஸ்டர் தின கொண்டாட்டத்திற்கு சென்ற நான்கு பேர் பலி! Featured

துபை(17 ஏப் 2017): ஈஸ்டர் தின கொண்டாட்டத்திற்காக துபையிலிருந்து அபூதாபி சென்ற பிலிப்பைன் நாட்டினர் நான்குபேர் விபத்தில் பலியானார்கள்.

அபூதாபியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஈஸ்டர் தினம் கொண்டாடுவதற்காக ஆறு பிலிப்பைன் நாட்டினர் காரில் சென்றுள்ளனர். கார் அபூதாபிக்கு அருகில் சென்றபோது இன்னொரு கார் மீது பயங்கரமாக மோதியதில் நான்குபேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இரண்டு பெண்கள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அபுதாபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

six Filipinos were in a four-wheel drive car travelling from Dubai to Abu Dhabi when their vehicle was hit by another vehicle. Four of them died on the spot.