சவூதி ஜித்தாவில் நடைபெற்ற இஸ்லாமிய சிறப்பு தமிழ் மாநாடு(படங்கள்) Featured

ஜித்தா(17 ஏப் 2017): சவூதி அரேபியா ஜித்தாவில் கடந்த ஏபரல் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜித்தா இஸ்லாமிய அழைப்பகம் தமிழ் பிரிவு சார்பில் சிறப்பு மாநாடு  சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மவுலவி இப்ராஹிம் மதனி, மவ்லவி அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி, இஸ்மாயில் ஸியாஹி B.Sc, மவ்லவி முஜாஹித் இப்ன் ரஸீன், மவ்லவி அப்துல் பாஸித்புஹாரி மற்றும், உண்மை உதயம் ஆசிரியர் மவ்லவி இஸ்மாயில் ஸலபி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முன்னதாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விளையட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்மாநாட்டில் தமிழ் பேசும் அனைத்து சமூக மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Last modified on Monday, 17 April 2017 14:20