சமூக வலைதளங்களில் ஒழுக்கக்கேடான வீடியோக்கள் வெளியிடுபவர்களுக்கு எச்சரிக்கை! Featured

துபை(06 மே 2017): சமூக வலைதளங்களில் ஒழுக்கக்கேடான வீடியோக்கள் வெளியிடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என துபை அரசு எச்சரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று சிலர் சமூக வலைதளங்களில் மாணவர்கள் முறைகேடாகவும், ஒழுக்கக்கேடாகவும் நடனமாடுவதுபோல் வீடியோ வெளியாகி வைரலாக பரவியுள்ளது.

இதனை அடுத்து இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என துபை அரசு எச்சரித்துள்ளது. மேலும் பெற்றோர்களுக்கும், பள்ளி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கும் இதுகுறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன.

The UAE General Prosecution has issued a statement warning prosecution for anyone who publishes on social media any video that goes against traditional values and morals of the UAE.