துபை விமான நிலையத்தில் பயணிக்கு மாரடைப்பு: காப்பாற்றிய மருத்துவ உதவியாளர்! Featured

துபை(07 மே 2017): துபை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ உதவியாளர் கொடுத்த முதலுதவியின் பேரில் அதிர்ஷ்டவசமாக பயணி உயிர் பிழைத்தார்.

துபை விமான நிலையத்தில் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் அங்கு வந்த DCAS மருத்துவ உதவிக்குழுவை சேர்ந்த மருத்துவ உதவியாளர்கள் அவருக்கு சில முதலுதவிகள் செய்தனர்.

மேலும் அனுபவம் வாய்ந்த அலி அல் ஹஃபிஸி என்ற தலைமை மருத்துவ உதவியாளரின் அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்ட பயணிக்கு cardiopulmonary resuscitation (CPR) மற்றும் electric shots to the heart உள்ளிட்ட முதலுதவிகள் அளிக்கப் பட்டதன் அடிப்படையில் பயணி ஆபத்தான கட்டத்திலிருந்து மீண்டார்.

உடன் அவர் விமான நிலைய மருத்துவமனைக்கு மாற்றப் பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றன.

Paramedics at Dubai International Airport were able to revive a passenger who suffered a cardiac arrest.