எகிப்து: கிறிஸ்தவர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்- 26 பேர் பலி! Featured

கெய்ரோ: எகிப்தில் கிறிஸ்தவர்கள் பயணித்த பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

செழுமையான நைல் நதி பாயும் வரலாற்று தொன்மைமிக்க எகிப்து நாட்டில் மிகவும் பழமையான பாரம்பரிய இனத்தவர்களான ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். நவநாகரிக காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவியர்களின் வாழ்க்கை முறைக்கும் ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்களின் வாழ்க்கை நெறிக்கும் இடையில் பெரிய வேறுபாடு உண்டு.

இந்நிலையில், எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின்யா பகுதியில் ‘கோப்டிக்’ கிறிஸ்தவர்களின் அன்பா சாமுவேல் குருகுலம் அமைந்துள்ளது. இந்த குருகுலத்துக்கு சில கிறிஸ்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Masked gunmen attacked a group of Coptic Christians in southern Egypt on Friday, killing 26 people and wounding 26 others as they were driving to a monastery, medical sources and eyewitnesses said.

The group was travelling in two buses and a small truck in Minya province, which is home to a sizeable Christian minority, the sources said.