சவூதி: மதீனா - கசீம் சாலை விபத்து: 6 பேர் பலி! Featured

ஜித்தா(28 மே 2017): சவூதி அரேபியாவில் மதீனா மற்றும் கசீம் இடையேயான சாலை விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 81 பேர் காயமடைந்துள்ளனர்.

மதீனாவிலிருந்து ரியாத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பகுதிகலுக்கு சென்றுகொண்டிருந்த ஐந்து பேருந்துகள் கசீம் சாலையில் புரைதாவுக்கு 225 கி.மீ தூரத்தில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 81 பேர் காயமடைந்துள்ளதாக சவூதி கெஜட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பலியானவர்கள் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டினர் என்று கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் ரெட் கிரசண்ட் மருத்து குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு உகுலத் அல் ஷகூர், அல்.நபனியா, அல் ராஸ், ரியாத் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

Last modified on Sunday, 28 May 2017 23:07