Friday, 09 June 2017 14:22

சவூதி ஜித்தாவில் மெப்கோ நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி! Featured

ஜித்தா(09 ஜூன் 2017): சவூதி அரேபியா ஜித்தாவில் (MEPCO)முஸ்லிம் கல்வி உதவி நிறுவனம் நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் வாழும் ஏழை மாணவர்கள் உயர் கல்விக்கு உதவி வரும் மெப்கோ தொண்டு நிறுவனம் சவூதி ஜித்தாவில் இயங்கி வருகிறது. இது கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தமிழக மாணவர்களுக்கு உயர் கல்விக்கு உதவி வருகிறது.

இவ்வமைப்பு கடந்த ஜூன் 07 ஆம்தேதி புதன்கிழமை இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சவூதி சேக் வருகை தந்து சிறப்பித்தார். மேலும் மெப்கோ நிர்வாகி ரஹ்மத்துல்லாஹ், ரபீக் ஜாஃபர், செயலாளர் நூருல் அமீன், சிராஜ் மற்றும் மெப்கோ நிர்வாகிகள் உட்பட பல்வேறு தொண்டு அமைப்புகளை சார்ந்த  பலர் நிகழ்ச்சியில் கலந்தகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை மெப்கோ துணைத்தலைவர் ரஃபியா தொகுத்து வழங்கினார்.

Last modified on Friday, 09 June 2017 15:42
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.