சவூதியில் 15 வயது இந்திய மாணவி மாரடைப்பால் மரணம்! Featured

அல்கோபர்(02 ஜூலை 2017): சவூதியில் 15 வயது இந்திய இளம் பெண் கடற்கரையில் பெருநாள் கொண்டாட்டத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

பெருநாள் கொண்டாட்டத்திற்காக பத்தாம் வகுப்பு மாணவி சாஹெர் பர்வாஸ் வெள்ளியன்று அவரது பெற்றோருடன் அல்கோபர் புகழ்பெற்ற ஹால்ஃப் மூன் கடற்கரைக்கு சென்றார். கடல் நீரில் நின்றுகொண்டிருந்த பர்வாஸ் திடீரென மயக்கமடைந்தார். உடன் அங்கு வந்த கோஸ்ட் கார்ட் அதிகரிகள் பர்வாஸை கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சாஹெர் ஃபர்வாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

10 ஆம் வகுப்பு மாணவியான சாஹெர் பர்வாஸ் தம்மாம் இந்தியன் இன்டெர்நேஷனல் பள்ளியில் (IISD)பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது.

A 15-year-old Indian girl has died of a heart attack while playing at the popular Half Moon beach in Al-Khobar city of Saudi Arabia.