குவைத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மிரட்டல் ஃபேஸ்புக் பதிவு: இந்தியர் மீது நடவடிக்கை! Featured

குவைத்(11 ஜூலை 2017): குவைத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதிராக பதிவிட்டதை அடுத்து அவரை நிறுவனத்திலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முகேஷ்குமார் என்ற இளைஞர் குவைத்தில் (Al Lewaa Security and Maintenance Services Company) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடந்த இரு பிரிவினரிடையேயான மோதலை சுட்டிக்காட்டி, முஸ்லிம்களை மிரட்டும் வகையில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாக பறவியது.

உடன் இதுகுறித்து நிர்வாக தலைமைக்கு புகார் அளித்ததன் அடிப்படையில் நிர்வாகம் அவரை உடனடியாக வேலையை விட்டு விலக்கி நடவடிக்கை எடுத்தது.

மேலும் இந்த விவகாரம் குறித்தும் முகேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் குவைத் இந்திய தூதரகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

An Indian man was sacked from a company in Kuwait following his anti-Muslim comment that went viral on social media, according to a media report.