Saturday, 05 August 2017 02:09

வீடியோ: மக்காவை வந்தடைந்த இந்திய ஹஜ் யாத்ரீகர்கள்! Featured

மக்கா(05 ஜூலை 2017): இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ள ஹஜ் யாத்ரீகர்களின் முதல் பிரிவினர் மதீனாவிலிருந்து மக்காவிற்கு வந்தடைந்தனர்.

சுமார் 2600 ஹஜ் யாத்ரீகர்கள் கடந்த வாரம் இந்தியாவிலிருந்து மதீனா சென்றடைந்தனர். அவர்கள் அனைவரும் 8 நாட்கள் அங்கு தங்கியிருந்த நிலையில். நேற்று மக்காவந்தடைந்தனர்.

இவர்களை இந்திய கன்சுல் ஜெனரல் நூர் ரஹ்மான் சேக், மற்றும் ஹஜ் கான்சுல் ஷாஹித் ஆலம் ஆகியோர் வரவேற்றனர். மேலும் ஹஜ் தன்னார்வ பணியாளர்களான இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் மற்றும் கே.எம்.சி. இன்னும் பல தன்னார்வலர்கள் அவர்களை வரவேற்று அவர்களுக்கு பல்வேறு உதவிகள் புரிந்தனர். மேலும் உணவு பொட்டலங்கள் மருந்துகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

ஹஜ் புனித கடமை இந்த மாத இறுதியில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.