மக்காவில் ஹாஜி்களின் சேவையை தொடங்கியது IFF Featured

மக்கா(05 ஆகஸ்ட் 2017): மதினாவிலிருந்து மக்கா வருகை தந்த இந்தியன் ஹாஜிகளை வரவேற்று தனது மக்காவின் ஹஜ் சேவையை தொடங்கியது இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம்.

இதுகுறித்து இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம் மக்கா தமிழ் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், "மக்காஹ் வந்திறங்கிய ஹாஜிகளை IFF நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்றனர்.. மக்காஹ் அஜிசியாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஹாஜிகளும், உம்-அல்-குரா சாலையில் 100க்கும் மேற்பட்ட ஹாஜிகளும் தங்கியுள்ளனர்.. வரவிருக்கும் ஹாஜிகளை வரவேற்கவும், அவர்களுக்கான சேவை புரியவும் IFF செயல்வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

வருடந்தோறும் புரியும் ஹஜ் சேவையின் முதல் நாள் நேன்றுடன் தொடங்கி வைத்திருக்கிறது இந்தியன் ஃபிரட்டர்னிடி ஃபோரம்." என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.