ஹஜ் அனுமதி ஆவணமின்றி மக்காவுக்குள் நுழைய தடை! Featured

மக்கா(08 ஆகஸ்ட் 2017): ஹஜ் செய்வதற்கான அனுமதி பத்திரமின்றி புனித மக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் முஸ்லிம்களின் முக்கிய கடமையான ஹஜ் நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில். ஹஜ் செய்ய அனுமதி பெறாமல் அதற்கான ஆவணங்கள் இன்றி மக்கா எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் செய்ய மக்காவுக்கு வரும் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூட்டத்தை கட்டுப்படுத்த சவூதி பாதுகாப்பு அதிகாரிகள் ஹஜ் காலங்களில் ஹஜ் செய்ய அனுமதி இல்லாதவர்களை மக்காவிற்குள் அனுமதிப்பதில்லை. சிலர் முன் கூட்டியே மக்காவிற்கு சென்று சட்டவிரோதமாக ஹஜ் செய்ய முயற்சி மேற்கொள்வர்.

கடந்த காலங்களில் இது அதிகரித்து வந்த நிலையில், இதற்கான சட்டதிட்டங்களை கடுமையாக்கியுள்ள சவூதி பாதுகாப்பு அதிகாரிகள் இம்முறையும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இம்முறை முன்கூட்டியே மக்கா எல்லையில் வைத்து ஹஜ் செய்ய அனுமதியில்லாத சவூதியில் வசிப்பவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் செக் பாயிண்டில் வைத்து திருப்பி அனுப்பபடவும் செய்துள்ளனர்.

மேலும் ஹஜ் செய்ய அனுமதி ஆவணங்கள் இல்லாமல் மக்காவிற்குள் நுழைய எத்தனித்தால் அவர்கள் கைரேகை வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர். சிலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. அதேவேளை ஹஜ் செய்ய அனுமதி ஆவணமில்லாமல் மக்காவிற்கு செல்ல முயற்சித்தாலோ, அல்லது ஹஜ் செய்ய முயற்சி மேற்கொண்டாலோ, அல்லது அவர்களுக்கு வாகன உதவி செய்தாலோ அவர்கள் கைது செய்யப்பட்டு சுமார் 50 ஆயிரம் சவூதி ரியால் அபராதம் விதிக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவார்கள். மேலும் வாழ்நாள் முழுவதும் சவூதி வரவும் அவர்கள் தடை விதிக்கப்படுவார்கள். என சவூதி குடியுரிமை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

There will be no leniency toward illegal pilgrims and those transporting them to the holy sites

 

Last modified on Tuesday, 08 August 2017 03:31