மக்காவில் இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ! Featured

மக்கா(09 ஆகஸ்ட் 2017): மக்காவில் இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் திடீரென ஏற்பட்டது.

மக்காவின் அஜீசியா பகுதியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்ததோடு, அங்கு தங்கியிருந்த இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் சுமார் 391 பேர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தெரிவித்த கேப்டன் நயிப் அல் ஷரீப், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததோடு, ஹஜ் யாத்ரீகர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை." என்றார்.

மொபைல் சார்ஜில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

About 390 Indian pilgrims had to be evacuated to safe areas after fire broke out in their building in Al-Aziziyah District here on Tuesday.