இந்தியாவிலிருந்து ஜித்தா வந்த ஹஜ் விமானம்! Featured

ஜித்தா(10 ஆகஸ்ட் 2017): இந்தியாவிலிருந்து ஹஜ் விமானம் புதனன்று ஜித்தா வந்தடைந்தது.

இந்தியாவிலிருந்து மதீனாவிற்கு நேரடியாக வந்த ஹஜ் விமானம் நேற்று முதல் நிறுத்தப்பட்டு தற்போது ஜித்தாவிற்கு வருகை புரிய தொடங்கியுள்ளன. புதனன்று பெங்களூரிலிருந்து ஜித்தா வந்த ஹஜ் பயணிகளை இந்தியன் அம்பாசிடர் அஹமத் ஜாவித், கான்சுல் ஜெனரல் நூர் ரஹ்மான் சேக் ஆகியோர் வரவேற்றனர்.

ஜித்தா வந்த இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் பேருந்து மூலம் நேரடியாக மக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். ஏற்கனவே இந்தியாவிலிருந்து மதீனாவிற்கு நேரடியாக விமானம் மூலம் வந்த இந்திய ஹஜ் பயணிகள் ஹஜ் முடிந்ததும், ஜித்தா வழியாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொளவர். அதேவேளை தற்போது இந்தியாவிலிருந்து ஜித்தா வந்து ஹஜ் செய்யும் ஹஜ் பயணிகள் ஹஜ் முடிந்ததும், மதீனாவிற்கு பயணம் மேற்கொள்வர். பின்பு மதீனாவிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு பயணம் மேற்கொளவர்.