இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா - கத்தார் அதிரடி! Featured

தோஹா(10 ஆகஸ் ட் 2017): இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பை கத்தார் நாடு வெளியிட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் கத்தார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கத்தார் சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அறிவிப்பால் வளைகுடா நாடுகளில் கத்தார் மிகவும் திறந்த வெளி நாடாக திகழும் என்றார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் முறித்துக்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.