இணைபிரியாத நட்புக்கு உதாரணம்: 80 வயது ஹஜ் யாத்ரீகர்களின் நெகிழ்ச்சி சம்பவம்! Featured

மக்கா(03 செப் 2017): இரு கண்களும் தெரியாத 80 வயது ஹஜ் யாத்ரீகர் அவரது பள்ளித்தோழரின் உதவியுடன் ஹஜ் கடமையை நிறைவேற்றியுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த இஜாஜ் தாலி அஹ்மத், மற்றும் அஹ்மது தாலோ ராஜ் ஆகியோர் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். இதில் அஹமது தாலோ ராஜுக்கு சில வருடங்களுக்கு முன்பு கண்பார்வை இல்லாமல் போனது.

இந்நிலையில் அஹ்மத் ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். அதேவேளை தனது நண்பர் தாலோ ராஜையும் அழைத்து செல்ல வேண்டும் என தீர்மானித்தார். ஆனால் ராஜிடம் போதிய பண வசதி இல்லாததால் ஹஜ் கடமையை நிறைவேற்ற தேவையான பண வசதி ராஜுக்கு வரும்வரை அஹமத் காத்திருந்தார்.

இவ்வருடம் ராஜுக்கு மக்கா செல்வதற்கான பண வசதி அமைந்தது. இருவரும் இவ்வருடம் மக்காவிற்கு ஹஜ் செய்ய வந்தனர். இரு கண்களும் தெரியாத ராஜுக்கு, அஹ்மது ஹஜ் கடமை நிறைவேறும் வரை உறுதுணையாக இருந்ததோடு, தற்போதுவரை இணைபிரியாமலேயே உள்ளனர்.

இதுகுறித்து அஹ்மத் கூறுகையில், " நானும் ராஜும் பள்ளிப் பருவத்திலிருந்தே இணைபிரியாத நண்பர்கள். இருவருக்கும் 55 வயதாக இருக்கும்போது ஹஜ் யாத்திரை செல்ல தீர்மானித்தோம், ஆனால் போதிய பணவசதி இல்லாததால் எங்கள் ஆசை தள்ளிப்போனது.

இதற்கிடையே ராஜுக்கு திடீரென கண்கள் தெரியாமல் போய்விட்டது. எனக்கு ஹஜ் செய்ய தேவையான பணவசதி இருந்தாலும், ராஜுடன் இணைந்து ஹஜ் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை. அதை இறைவன் இவ்வருடம் நிறைவேற்றினான்." என்றார்.

மேலும் தானது நண்பர் அஹமதின் உதவியுடன் ஹஜ்ஜை நிறைவேற்றிய அஹமத் தாலோ ராஜ் கூறுகையில்," என்னால் அஹ்மதுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்தான் எனது கண்கள், ஒரு கையில் கைத்தடியும், மற்றொரு கையை அஹமதின் தோளிலும் சாய்த்து எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். ஹஜ்ஜை முழுமையாக முடிக்க அஹமத் எனக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறார். மேலும் எனக்கு பண வசதி அமைவது வரை எனக்காக காத்திருந்தார். அவருக்காக நான் ஹஜ்ஜில் நிறையவே பிரார்த்தித்தேன்" என்றார்.

Two Pakistani pilgrims have set a real example of true friendship. Ejaz Dalali Ahmad and Ahmad Dalo Raj, both over 80 years old, decided to perform Haj together. They made a promise to one another decades ago that they would raise money together and go to Haj together. What make the lifetime journey all the more interesting is that Ahmed Dalo Raj is blind; he lost his sight many years ago.