இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹஜ் செயல்பாடுகள் வெற்றிகரமாக நிறைவேறியது: எம்.ஜே.அக்பர்! Featured

மக்கா(05 செப் 2017): ஹஜ் செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்கு மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இவ்வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்டிருந்த ஹஜ் யாத்ரீகர்களுக்கு இந்தியன் ஹஜ் மிஷன் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு பெரும் அளவில் உதவி புரிந்த சவூதி ஹஜ் அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எம்.ஜே.அக்பர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவ்வருடம் இந்தியாவிலிருந்து சென்ற ஆண்டை விட அதிக ஹஜ் யாத்ரீகர்கள் கலந்துகொண்ட போதும், இந்தியன் ஹஜ் மிஷன் சிறப்பாகவே செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து ஹஜ் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க மத்திய அரசின் சார்பில் வருகை புரிந்த எம்.ஜே.அக்பர், செய்யது சஃபர் இஸ்லாம் மற்றும் சவூதி இந்திய அம்பாசிடர், இந்திய தூதரக அதிகாரி உள்ளிட்டோர் சவூதி மன்னர் அளித்த விருந்தில் கலந்துகொண்டனர்.