குறைந்த வருமானம் உள்ள வெளிநாட்டினருக்கும் ஃபேமிலி விசா! Featured

மஸ்கட்(05 அக் 2017): ஓமன் நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டும் வெளி நாட்டினரும் இனி குடும்பத்துடன் வாழ அந்நாடு அனுமதி அளித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள், உயர் பதவி வகிக்கும் வெளிநாட்டினர் மட்டுமே அங்கு குடும்பத்துடன் வாழ இயலும்.

இந்நிலையில் ஓமன் நாட்டில் குறைந்தது 300 ஓமன் நாட்டு கரன்ஸி மாத வருமானம் ஈட்டும் வெளிநாட்டினர் இனி குடும்பத்துடன் வாழ முடியும் என்றும். அவர்களுக்கு விசா அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு முன்பு 600 OMR வருமானம் ஈட்டுபவர்கள் குடும்பத்துடன் வாழ அனுமதி இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.