Monday, 06 November 2017 01:37

மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளை முன்னிட்டு ஆன்லைன் வினாடி வினா போட்டி! Featured

ஜித்தா(05 நவ 2017) மவுலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் 129 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜித்தா இந்தியன் சோசியல் பாரம் நடத்தும் ஆன்லைன் வினாடி வினா போட்டி வரும் நவம்பர் 7 ஆம் தேதிமுதல் நவம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் மவுலானா அபுல் கலாம் ஆசாத் குறித்து இளம் தலைமுறையினரும் மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த போட்டி நடத்தப்படவுள்ளது.

ஜித்தாவில் பயிலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்காக நடத்தப்படும் இந்த போட்டிக்கான படிவம் ஆன்லைனில் https://goo.gl/forms/SVRGDbJNsMGxOV3E2 என்ற முகவரியில் உள்ளது. கேள்விக்கான பதிலை ஆன்லைனிலேயே பதிலளிக்க வேண்டும். பதில்கள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.  இந்த கேள்வி பதில் படிவம் நவம்பர் 7 ஆம் தேதி காலை 10 மணி முதல் 16ஆம் தேதி இரவு 10 வரை இணையத்தில் திறந்து இருக்கும் இந்த இடைவெளியில் எப்போது வேண்டுமானாலும் பதிலளிக்கலாம்.

அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு மதிப்பு மிக்க பரிசுகள் காத்திருக்கின்றன. என்று இந்தியன் சோசியல் ஃபாரம் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

Last modified on Monday, 06 November 2017 10:59
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.