Monday, 13 November 2017 14:23

இரான் ஈராக் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 210 ஆக உயர்வு! Featured

பாக்தாத்(13 நவ 2017): இரான் ஈராக் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 210 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக் பகுதியில் குர்தீஷ் அரசால் நிர்வகிக்கப்படும் சுலைமேனியா நகரத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவாகியுள்ளது. மேலும், இதன் தாக்கம் கத்தார் வரையில் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 210 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோரின் விவரங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அரசு இறந்தவர்களின் அதிகாரப்பூர்வமான பட்டியலை இன்னமும் வெளியிடவில்லை. உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் மற்றும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என அஞ்சப்படும் நிலையில், பெரும்பாலான பொதுமக்கள் வீதிகளில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர்.

Last modified on Monday, 13 November 2017 14:25
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.