சவூதியில் இடி மின்னலுடன் பலத்த மழை! Featured

ஜித்தா(21 நவ 2017): சவூதி அரேபியா ஜித்தாவில் செவ்வாயன்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

செவ்வாயன்று காலை சுமார் 09 மணிக்கு தொடங்கிய மழை 10;15 வரை நீடித்தது. எனினும் அவ்வப்போது தூறல் இருந்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மழையையொட்டி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் மழை தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சவூதி ஜித்தாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெய்த மழையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.