ரியாத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தமுமுக உதவியுடன் தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டார்! Featured

ரியாத்(25 நவ 2017): ரியாத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்த தமிழகத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் ரியாத் தமுமுக உதவியுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ரியாத்தில் வீட்டு வேலை செய்து வந்தவர் கண்ணன். புதுக்கோட்டை மாவட்டம் மேலதானியம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்தார். மேலும் ரியாத் சுமைசி மருத்துவமனைல் சிகிச்சை பெற்று வந்த கண்ணனை தமிழகம் அனுப்பி வைக்க ரியாத் தமுமுக முன்னின்று ஏற்பாடுகள் செய்தது.

இவருக்கு கேரளாவை சேர்ந்த OICC சமூக சேவகர் ஷாஜாத் மற்றும் ஸ்பான்சர் உதவியுடன் மீமிசல் செல்லும் சாதிக் என்பவருடன் தமிழகத்திற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

கண்ணனுக்கு உதவிய நல்லுல்லங்களுக்கு கண்ணன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.